லாரியில் கொண்டு வரப்பட்ட மின்னணு பொருட்கள் கொள்ளை - ஓட்டுநர்களுக்கு வலைவீச்சு
சேலத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக் பொருட்கள் கொள்ளை போன சம்பவத்தில் ஓட்டுநர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம்,
சேலத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் கொள்ளை போன சம்பவத்தில் ஓட்டுநர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியானா மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு வந்தது.
நாட்டார்மங்கலம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு பொருட்களை ஏற்றிவந்த லாரி, நிறுவனத்தின் நுழைவுவாயிலில் கேட்பாரற்று கிடந்தது. இதையடுத்து அலுவலக ஊழியர்கள் லாரியை சோதனை செய்ததில், அதிலிருந்த பொருட்களில் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரிக் பொருட்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
எலக்ட்ரிக் பொருட்கள் மாயமாகியுள்ள நிலையில், புகாரின் அடிப்படையில் தலைமறைவாகியுள்ள ஓட்டுநர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story