குரூப்-4 பணிகளுக்கு இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம்
குரூப்-4 பணிகளுக்கு இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம்.
சென்னை,
குரூப்-4 பதவிகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த மாத இறுதியில் வெளியிட்டது. மொத்தம் உள்ள 7 ஆயிரத்து 301 இடங்களுக்கு இந்தப் போட்டித்தேர்வு நடத்தப்பட இருக்கிறது.
இதற்கு விண்ணப்பிக்க வருகிற 28-ந் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்தத் தேர்வுக்கு பலர் போட்டி போட்டு ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று வரையிலான நிலவரப்படி, இந்தப் பணியிடங்களுக்கு 7 லட்சத்து 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன. இன்னும் 11 நாட்கள் விண்ணப்பிக்க அவகாசம் உள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Tags :
Next Story