சிறுமியின் தாய் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய என்ஜினீயர் கைது


சிறுமியின் தாய் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 18 April 2022 3:24 AM IST (Updated: 18 April 2022 3:24 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே சிறுமியின் தாய் குளிப்பதை வீடியோ எடுத்து, அச்சிறுமியை மிரட்டிய என்ஜினீயரும், இதற்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வன்(வயது 33). என்ஜினீயரான இவர் அதே கிராமத்தில் எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பர் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று 32 வயதுடைய பெண் ஒருவர் அவரது வீட்டில் குளித்து கொண்டிருந்ததை செல்வன் மறைந்து இருந்து தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை செல்வன் அந்த பெண்ணின் 15 வயதுடைய மகளின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பியதாக தெரிகிறது.

சிறுமியை ஆசைக்கு இணங்குமாறு...

மேலும், செல்வன் அந்த சிறுமியிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறும் இல்லையென்றால், உன் தாயின் குளியல் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்றும் மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, இதுகுறித்து தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் இது தொடர்பாக, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் அதிரடியாக செல்வனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

உறவுக்கார பெண்ணும் கைது

விசாரணையில், செல்வனின் இந்த செயலுக்கு முழுக்க, முழுக்க உடந்தையாக இருந்தது அவரது அக்கா உறவுமுறையான அதே ஊரைச் சேர்ந்த மலர்கொடி(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து மலர்கொடியையும் போலீசார் கைது செய்தனர்.

செல்வனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பெண் கைக்குழந்தை ஒன்று உள்ளனர். செல்வனின் தாய் வேலூர் ஊராட்சியில் 5-வது வார்டு உறுப்பினராகவும் உள்ளார்.

Next Story