இளையராஜா கூறியது இயல்பானது ‘தமிழகத்தில் மத்திய அரசு மீதான வெறுப்புணர்வை திட்டமிட்டு பரப்புவது சரியல்ல’
‘மத்திய அரசு மீதான இளையராஜா கருத்து இயல்பானது, தமிழகத்தில் மத்திய அரசு மீதான வெறுப்புணர்வை திட்டமிட்டு பரப்புவது சரியல்ல’, என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பட்டியலின மக்களுக்கான சிறப்பு திட்டங்களை கொண்டுவந்து, அதன்மூலம் முன்னேற்றம் அவர்களை சென்றடைந்து இருக்கிறது. அம்பேத்கர் உயிரோடு இருந்தால் நிச்சயம் இதை பாராட்டியிருப்பார்’, என இசையமைப்பாளர் இளையராஜா தெளிவாக கூறியிருக்கிறார்.
இதற்காக இளையராஜா எதையோ எதிர்பார்த்து தான் இப்படி கருத்து சொல்லியிருக்கிறார் என்று பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எல்லாருடைய மனதிலும் ஒரு மனமாற்றம் வரும். அப்படி ஒரு மாற்றம் ஒரு பிரபலமான நபருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் தாக்கம் பெரியளவில் இருக்கும் என்பதாலேயே இப்படி விமர்சனங்கள் எழுகின்றன.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ‘தமிழ் மொழி தான் இணைப்பு மொழியாக வரவேண்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார். நான் கேட்கிறேன், அவரது பெயர் தமிழா? இளையராஜா கூறியது இயல்பானது. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் கூறியது உள்நோக்கம் கொண்டது. மத்திய அரசுக்கு எதிராக திட்டமிட்டு தமிழகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றனர். இது சரியல்ல.
வாக்குறுதியை நிறைவேற்றவில்லை
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடிய பாரதியாரின் சிலை திறப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளாதது ஏன்?
தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆக போகிறது. அதாவது 365 நாட்கள் மட்டுமே கழிய போகின்றன. தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சியை கூட செய்யவில்லை. தி.மு.க.வினர் அதிகார வரம்பை மீறி பேசுகின்றனர்.
சட்டசபையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றுவது வீண் முயற்சி. இது மக்களை ஏமாற்றும் முயற்சி. 2017-ம் ஆண்டு இதேபோல தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதை ஜனாதிபதி திருப்பி அனுப்பினார். மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப கவர்னருக்கு காலக்கெடு என்பது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story