மயிலாடுதுறையில் வ.உ.சி-யின் நகரும் புகைப்படக் கண்காட்சி; ஆர்வத்துடன் கண்டுகளித்த மாணவர்கள்!
மயிலாடுதுறையில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரை நினைவு நகரும் புகைப்படக் கண்காட்சியை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை:
சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்க அவரது வாழ்க்கை வரலாற்றினை பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் குறிப்பிடப்பட்ட அரசு பேருந்தில் நகரும் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் செல்லும் வகையில் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களுக்கு சென்று வந்த இந்த வாகனம் இன்று மயிலாடுதுறை மாவட்டம் வந்தடைந்தது. மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் லலிதா தலைமை தாங்கி கொடியசைத்து வாகனத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள பள்ளிகளில் காட்சிப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சீர்காழியிலும், மதியம் 2 மணி முதல் காலை 5 மணி வரை செம்பனார்கோயில் பகுதியிலும் உள்ள பள்ளிகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story