ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு


ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
x
தினத்தந்தி 19 April 2022 2:51 AM IST (Updated: 19 April 2022 2:51 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு 26-ந்தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.

சென்னை,

ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 எழுதுவதற்கு விண்ணப்பிக்க கடந்த 13-ந்தேதி கடைசி நாள். இந்தநிலையில், தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 எழுதுவதற்கான அறிவிக்கை கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதியன்று வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் மார்ச் 14-ந்தேதி முதல் கடந்த 13-ந்தேதி வரை பெறப்பட்டன. இந்தநிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணபிப்பதற்கான காலக்கெடுவினை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் தொடர்ந்து பெறப்பட்டது. இதையடுத்து, 18-ந்தேதி (நேற்று) முதல் வருகிற 26-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story