மதுரை சித்திரை திருவிழா நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் சட்டசபையில் அமைச்சர் பேச்சு
மதுரை சித்திரை திருவிழா நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு பேசினார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தை தொடங்கிவைத்து அ.தி.மு.க. உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் (திருமங்கலம் தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்:- மதுரை சித்திரை திருவிழாவில் 10 லட்சம் பக்தர்கள் கூடினார்கள். முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 2 பேர் பலியாகி இருக்கிறார்கள். 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.
15 லட்சம் பக்தர்கள்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு:- மதுரை சித்திரை திருவிழாவை 3 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் பார்க்கும் நிலை ஏற்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக, கடந்த மாதம் 13-ந் தேதி மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. தொடர்ந்து 17-ந் தேதி அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 30 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
அழகர் ஆற்றில் இறங்கிய பிறகு, அவரை காண பக்தி பசியில் பக்தர்கள் முண்டியடித்தனர். 10 லட்சம் பக்தர்கள் எதிர்பார்க்கப்பட்டாலும், 15 லட்சம் பக்தர்கள் கூடினார்கள். அப்போது ஏற்பட்ட நெரிசலில் ஜெயலட்சுமி, செல்வம் என்ற 2 பக்தர்கள் மரணம் அடைந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர். அதில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நல்ல நிலையில் உள்ளனர்.
அரசியல் சாயம்
இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். இந்த சம்பவம் நேர்ந்தது வருத்தம் அளிக்கிறது. இது எங்களுக்கு படிப்பினை.
இதை கவனத்தில் கொண்டு, திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி அன்று கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற 6 துயரச் சம்பவங்களில் 44 பேர் இறந்துள்ளனர். வருங்காலங்களில் போர் கால அடிப்படையில் பாதுகாப்பு திட்டமிடப்படும். இதில் அரசியல் சாயம் பூச வேண்டாம்.
திட்டத்தை நிறுத்திவைத்து ஆய்வு
உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்:- இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணத்தொகையை கூடுதலாக வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த விபத்து காப்பீடு திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்தார். அந்த திட்டம் இப்போது நிறுத்தப்பட்டு உள்ளது.
வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்:- இந்த திட்டத்திற்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதில் ரூ.4 லட்சம்தான் உரிமை கோரப்பட்டுள்ளது. அதனால், அந்த திட்டத்தை நிறுத்திவைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இலவச வேட்டி, சேலை
உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்:- இலவச வேட்டி, சேலை திட்டம் மக்களை முறையாக சென்றடையவில்லை.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்:- 1 கோடியே 80 லட்சம் பேருக்கு வேட்டி, சேலை வழங்க உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்:- அ.தி.மு.க. ஆட்சியில், புயல் பாதிப்பின்போது மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து ஆய்வு செய்தார்.
ரூ.1,000 கோடியில் திட்டம்
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்:- அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அவர் வந்தார். தி.மு.க. ஆட்சியில் கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அங்கு வந்தார். அ.தி.மு.க. ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறந்துவிடப்பட்டது. கடந்த மழையின்போது, நாங்கள் நேரடியாக அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டோம்.
அமைச்சர் சேகர்பாபு:- கடந்த ஆண்டு 45 நாட்கள் தொடர் மழை பெய்தது. அத்தனை நாளும் முதல்-அமைச்சர் மழை வெள்ள பாதிப்பையும், நிவாரணப்பணிகளையும் பார்வையிட வந்தார். சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க கடந்த 4 மாதத்தில் மட்டும் ரூ.120 கோடியில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அடுத்த ஆண்டு மழை காலங்களில் ஒரு சொட்டு தண்ணீர்கூட தேங்காது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.1,000 கோடியில் திட்டம் போட்டு, ஒரு சொட்டு தண்ணீர்கூட இனி தேங்காது என்று சொன்னீர்கள். அது நடந்ததா?.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்:- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் எப்போதும் தண்ணீர் தேங்காத தியாகராயநகர் பகுதியில் வெள்ளநீர் தேங்கியது.
அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி:- சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க 376 கி.மீ. தூரத்திற்கு திட்டம் தீட்டப்பட்டு 300 கி.மீ. தூரத்திற்கு வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. முன்பு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது. தற்போது, 150 இடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றுகிறது. தியாகராயநகர் பகுதியில் அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டபோது 3 ஆண்டுகள் நீர் தேங்கவில்லை. மழை வராது என நினைத்து, மாம்பலம் கால்வாயை அடைத்து வேலை பார்த்தபோதுதான் நீர் தேங்கியது.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்:- அதை கவனிக்காமல் விட்டதால்தான் வெள்ள நீர் தேங்கியது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Tags :
Next Story