கவர்னர் பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கவர்னர் பாதுகாப்பு வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனத்தை சந்தித்து விட்டு திரும்பி வரும் வழியில், மன்னம்பந்தல் என்ற இடத்தில் சமூகவிரோதிகள் கற்களையும், கருப்புக்கொடி கம்புகளையும் கொண்டு அவர் சென்ற வாகனங்களின் மீது கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
தமிழகத்திலேயே, கவர்னர் மீது கற்களையும், கம்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதும், தமிழகத்திற்கு உள்ளேயே தமிழக கவர்னர் பயணிக்க முடியவில்லை என்பது, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு எவ்வளவு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
கடும் கண்டனம்
தமிழக கவர்னருக்கே பாதுகாப்பு இல்லை எனில், சாதாரண மக்களுக்கு இந்த விடியா அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைவதை அ.தி.மு.க. ஒருபோதும் ஏற்காது என்பதோடு, கழகத்தின் சார்பில் இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக கவர்னர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
இதேபோல் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணி
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கவர்னர் ரவியின் வாகனம் மீதும், பாதுகாப்பு வாகனங்கள் மீதும் கருப்பு கொடியுடன் கூடிய தடிகள், கட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்துறையினரின் கண்முன்னே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது போன்ற செயல்கள் தமிழக அரசியல் மாண்பை கேவலப்படுத்துவதாக அமையும். தமிழகத்துக்கென்று அரசியல் நாகரிகம் உள்ளது. இந்த சம்பவத்தை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது’ என்று கூறியுள்ளார்.

Related Tags :
Next Story