கவர்னர் பயணத்தில் இடையூறு ஏற்படுத்தி இருந்தால் கண்டனத்துக்குரியது - கார்த்தி சிதம்பரம் எம்.பி


கவர்னர் பயணத்தில் இடையூறு ஏற்படுத்தி இருந்தால் கண்டனத்துக்குரியது - கார்த்தி சிதம்பரம் எம்.பி
x
தினத்தந்தி 20 April 2022 6:54 AM IST (Updated: 20 April 2022 6:54 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் பயணத்தில் இடையூறு ஏற்படுத்தி இருந்தால் கண்டனத்துக்குரியது என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி.கூறினார்.

சிவகங்கை, 

கார்த்தி சிதம்பரம்  எம்.பி. சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் அது ஜனநாயக முறைப்படி இருக்க வேண்டும். ஆனால் அவரது பயணத்துக்கோ, பாதுகாப்புக்கோ இடையூறு வந்திருந்தால் அது கண்டனத்துக்குரியது. 

இந்த சம்பவத்தை தமிழகத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வைத்து சட்டம்-ஒழுங்கு கெட்டுள்ளது என்று கூறியது ஏற்கத்தக்கதல்ல.  தி.மு.க.- காங்கிரஸ் கட்சிக்கு இடையே உள்ள தேர்தல் உடன்பாட்டின்படி ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தருவார்கள் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story