போலீசார் குறித்த தனி நீதிபதி கருத்து நீக்கம் : ஐகோர்ட்டு உத்தரவு


போலீசார் குறித்த தனி நீதிபதி கருத்து நீக்கம் : ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 April 2022 9:22 AM GMT (Updated: 2022-04-20T14:52:22+05:30)

தனி நீதிபதி தெரிவித்த கருத்து நீக்கம் செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

சென்னை ,

காவல்துறையில் 90 சதவீதம்  ,அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாகவும் ,10 சதவீத  அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளதாக தனி நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். 

தனி நீதிபதியின் இந்த கருத்துக்களை நீக்கக்கோரி தமிழக டிஜிபி சார்பில் சென்னை  ஐகோர்ட்டில்   மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது .

இந்நிலையில் காவல்துறையில் 90 சதவீதம்  அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாக ,தனி நீதிபதி தெரிவித்த கருத்து நீக்கம் செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது 

Next Story