தண்ணீர் இறைக்கும் போது கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு...!


தண்ணீர் இறைக்கும் போது கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு...!
x
தினத்தந்தி 20 April 2022 4:30 PM IST (Updated: 20 April 2022 4:23 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே தண்ணீர் இறைக்கும் போது கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி சிதம்பரம் செட்டியார் சந்து வீதியை சார்ந்தவர் சண்முகநாதன் மனைவி கோமதி(63). 

இவர் காலை 10.30 மணியளவில் தனது வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீர் இறைக்கும் போது தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். சத்தம் கேட்ட அவரது மகன்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். 

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி மூதாட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.






Next Story