இந்தி மொழிக்கு அ.தி.மு.க. பட்டுக்கம்பளம் விரித்த வரலாறுகளை மூடி மறைக்க முயற்சி அமைச்சர் தாக்கு
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையை வெளியிட்டு, இந்தி மொழிக்கு அ.தி.மு.க. பட்டுக்கம்பளம் விரித்த வரலாறுகளை எல்லாம் மூடி மறைக்க முயற்சிக்கிறார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை,
மொழிப்பிரச்சினையில் வழக்கம்போல அ.தி.மு.க. மேற்கொள்ளும் இரட்டைவேடம் இப்போது வெட்ட வெளிச்சமாக மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டுவிட்டதும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. மீது அவதூறுகளை அள்ளிவீசி அறிக்கை வெளியிட்டு, இந்தி மொழிக்கு அ.தி.மு.க. பட்டுக்கம்பளம் விரித்த வரலாறுகளை எல்லாம் மூடி மறைக்க முயற்சித்திருக்கிறார்.
சங்கம் வளர்த்த மதுரை மாநகரில், தமிழன்னைக்கு ரூ.100 கோடி செலவில் சிலையமைத்து சிறப்பு செய்யப்படும் என அறிவித்துவிட்டு, அதற்காக ஒரு ரூபாய்கூட நிதி ஒதுக்காமல் இறுதியில் அந்த திட்டத்தையே கைவிட்டுவிட்டு தமிழன்னையை அவமதித்தது அ.தி.மு.க. அரசு என்பதையும், அந்த அரசில்தான் 10 ஆண்டுகாலமாக நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீர்செல்வம் படித்து வந்திருக்கின்றார் என்பதனையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விழைகின்றேன்.
வேடிக்கை-வேதனை
பேரறிஞர் அண்ணாவால் அறிவிக்கப்பட்டு, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டு, தமிழ் ஆராய்ச்சிக்கென்றே அமைக்கப்பட்ட உயர்அமைப்பான உலக தமிழாராய்ச்சி நிறுவனத்திலேயே இந்தி மொழி கற்றுத்தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட அ.தி.மு.க. அரசில்தான், ஓ.பன்னீர்செல்வம் அமைச்சராக இடம்பெற்றிருந்தார் என்பதை மறுக்கமுடியுமா?
பரிதிமாற்கலைஞர் கண்ட கனவை நனவாக்கி முத்தமிழறிஞர் கலைஞரின் தளராத முயற்சியால் தமிழன்னையில் மகுடத்தில் ஒளிவீசும் மாணிக்கமாக வீற்றிருக்கும் செம்மொழி என்ற தகைமையை-அந்த சொல்லைக்கூட பத்தாண்டுகால தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்கக்குறிப்புகளில் இடம்பெறாது பார்த்துக்கொண்ட அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்வளர்ச்சிக்கான சாதனைகள் என பட்டியல் போட முனைந்திருப்பதுதான் வேடிக்கையானது; வேதனையானதும் கூட.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story