போலீசில் 90 சதவீதம் பேர் ஊழல்வாதிகள் என்ற கருத்து நீக்கம் - ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ்நாடு போலீசில் 90 சதவீதம் பேர் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர் என்ற தனி நீதிபதி கருத்தை தீர்ப்பில் இருந்து நீக்கம் செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நாமக்கல்லைச் சேர்ந்த வசந்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், எங்களுடைய குடும்ப சொத்தை நடேசன், ராஜவேலு ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக விற்பனை செய்துவிட்டனர். அதுகுறித்து நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தேன். ஆனால், உண்மைக்குப் புறம்பாக புகார் இருப்பதாக கூறி இந்த வழக்கை முடித்து வைத்து போலீசார் உத்தரவிட்டனர். அதை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. ஆனால் போலீசார் மறுபடியும் புகார் உண்மைக்குப் புறம்பானது என்று கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர். போலீசாரின் இந்தச் செயல் கோர்ட்டு அவமதிப்பு ஆகும்’ என்று கூறியிருந்தார்.
ஊழல்வாதிகள்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு போலீசில் 90 சதவீதம் பேர் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர். எஞ்சிய 10 சதவீத பேர் நேர்மையானவர்களாக உள்ளனர். இந்த 10 சதவீத போலீசாரை கொண்டு ஒட்டு மொத்த வழக்குகளை விசாரிக்க முடியாது. எனவே, ஊழல் போலீசாரை அகற்றி, நேர்மையான போலீசாருக்கு திறமையாக செயல்பட போதிய பயிற்சிகளை வழங்கவேண்டும் என்று தீர்ப்பு அளித்து இருந்தார்.
அதை எதிர்த்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
கருத்து நீக்கம்
அப்போது டி.ஜி.பி. சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா, ‘தனி நீதிபதி தனது உத்தரவில் 90 சதவீத போலீஸ் அதிகாரிகள் ஊழல்வாதிகள், திறமையற்றவர்கள் என கருத்து தெரிவித்துள்ளார். இது வழக்கின் எல்லைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. உயிரைப் பணயம் வைத்து பணி புரிந்துவரும் போலீஸ் அதிகாரிகளுக்கு இதுபோன்ற உத்தரவு மிகுந்த வருத்தத்தையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோல வழக்குக்கு சம்பந்தமில்லாத கருத்துகளை நீதிபதிகள் தெரிவிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் தீர்ப்பில் உள்ள கருத்துகளை நீக்க வேண்டும்’ என்று வாதிட்டார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் தீர்ப்பில் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான கருத்துகளை மட்டும் நீக்கி உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story