சென்னை, தூத்துக்குடியில் சிறு, குறு நிறுவனங்கள் தொடங்க ஒப்புதல் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சிறு, குறு நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை மானியக் கோரிக்கையில் அளித்த பதிலுரையில், சென்னை மற்றும் தூத்துக்குடியில் ரூ.570 கோடியில் சிறு, குறு நிறுவனங்கள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சிறு, குறு நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். மேலும் எம்.எஸ்.எம்.இ. மூலம் 5 ஆயிரத்து 995 நிறுவனங்களுக்கு 306 கோடி ரூபாயில் மானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தனது பதிலுரையில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story