டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு , மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ;
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் , டெல்டா மாவட்டங்கள் ,அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் .
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு , மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Related Tags :
Next Story