மின்தடையை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்...!


மின்தடையை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்...!
x
தினத்தந்தி 22 April 2022 3:45 PM IST (Updated: 22 April 2022 3:39 PM IST)
t-max-icont-min-icon

மின்தடையை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் செய்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வந்தவாசி,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றியுள்ள 130-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறிவிக்கப்படாத கடுமையாக மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வந்தவாசி மற்றும் அதனை சுற்றி உள்ள வெண்குன்றம், கடம்பை, சென்னாவரம் ,மருதாடு, ஆராசூர், பொன்னூர், அம்மையப்பட்டு,மடம்,மழையூர், வங்காரம் உள்ளிட்ட  கிராமங்களில் இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் சுமார் 2  மணி நேரமாக அறிவிக்கப்படாத கடுமையாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் அறிவிக்கப்படாத கடுமையாக மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் கோடை வெப்பம் காரணமாக தொடர்ந்து மின்சாரம் இல்லாததால் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் விசிறி மூலம் விசிறி கொண்டும் வீட்டின் வெளியே அமர்ந்து பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால் வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் அறிந்து வந்த போலீசார் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்தனர். 

Next Story