நீலகிரி: ஆட்டோ மீது கார் மோதி விபத்து - டிரைவர் படுகாயம்...!


நீலகிரி: ஆட்டோ மீது கார் மோதி விபத்து - டிரைவர் படுகாயம்...!
x
தினத்தந்தி 22 April 2022 4:00 PM IST (Updated: 22 April 2022 3:58 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்து உள்ளார்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தட்டக்கொல்லி பகுதியைச் சேர்ந்தவர் யூசுப் (வயது 62). இவர் தனது ஆட்டோவில் கூடலூரில் இருந்து தொரப்பள்ளிக்கு இன்று சென்று கொண்டிருந்தார். 

அப்போது கர்நாடகாவில் இருந்து கூடலூர் நோக்கி வந்த சுற்றுலாப் பயணி ஒருவரின் கார் ஆட்டோ மீது மோதியது இந்த விபத்தில் கார் மற்றும் ஆட்டோவின் முன் பகுதி சேதம் அடைந்தது.

அதில் ஆட்டோ டிரைவர் யூசுப் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். 

இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story