சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் உள்ள தேவூர் துணை மின் நிலையத்தில் இருந்து எடப்பாடி குரும்பப்பட்டி துணை மின் நிலையம் வரை விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முன் நுழைவு அனுமதி வழங்கியது.
இதை திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சங்கம் சார்பில் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது கோரிக்கைகளை மனுவாக அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை ஏற்று, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story