"ஓரிரு நாளில் மின்தடை என்ற பேச்சிருக்காது" - அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்
தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின்தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, வெளி மாநிலங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். கூடுதல் மின்சாரம் வாங்கவும் முடிவு செய்திருப்பாக கூறிய அமைச்சர், நிலக்கரியை எடுத்து வருவதில் காலதாமதம் உள்ளதாகவும், மத்திய தொகுப்பு மின்சாரம் கிடைக்காததும் காரணம் என்றார்.
நாள் ஒன்றுக்கு 72ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், அதுவும் குறைத்ததே மின்தடைக்கு காரணம் என்று செந்தில்பாலாஜி கூறினார். முதல் அமைச்சர் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக சிக்கல் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்று கூறிய அவர், தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்றும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story