நாகை: கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி...!

கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாகை,
நாகை மாவட்டம் கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இந்த நிலைஇயில் ன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் 11.35 மணி அளவில் மழை பெய்ய தொடங்கி. இந்த மழை சுமார் 45 நிமிடம் பெய்தது.
இதனால் கீழ்வேளூர் கடைவீதி, 4 வீதிகள் ,பேரூராட்சி பகுதிகள்,தேவூர், இரட்டை மதகடி, காக்கழனி நீலப்பாடி, அத்திப்புலியூர், குருமணாங்குடி, ஏரவாஞ்சேரி, குருக்கத்தி, கூத்தூர், பட்டமங்கலம், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், ஒர்குடி, கடம்பன்குடி, உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
இந்த மழையால் வெயில் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story