அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு சார்பாக விருது வழங்கும் விழா - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு சார்பில் 'டெக் நோ 2022' நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை,
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு சார்பில் 'டெக் நோ 2022' நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, தொழிற்துறையினருக்கு 8 பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கினார்.
3 நபர்களுக்கு சிறந்த தமிழ் குடிமகன் விருது வழங்கினார். அதில் கல்வி துறையைச் சேர்ந்த ஆர்.எஸ்.மணிரத்னம், தொழில் துறையைச் சேர்ந்த ஜி.கே.ரங்கநாதன் மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் உள்ளிட்ட 3 துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ் குடிமகன் விருதுகளை வழங்கினார்.
மேலும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 6 சிறந்த மாணவர்களுக்கு பணிநியமன ஆணையையும் வழங்கினார். இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விழாவில் பேசிய முதல் அமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், எந்த துறையும் தனித்துறையாக செயல்பட முடியாது, ஒவ்வொரு துறையும் தேவையான நேரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார். கல்வி, தொழில் மற்றும் உற்பத்தி துறை இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதிகளை மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும். தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்களை பன்னாட்டு நிறுவனங்கள் பணிக்கு தேர்வு செய்கின்றன.
சிறந்த முதல்வர் ஸ்டாலின் என்பதைவிட, சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்பதிலேயே எனக்கு மகிழ்ச்சி. நமது சாதனைகளுக்கு சமூக நீதி கொள்கையே முக்கிய காரணம்' என்று கூறினார்.
Related Tags :
Next Story