சேலத்தில் களைகட்டிய ஆட்டுச்சந்தை - ரூ.1 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை
ஆட்டுச்சந்தையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.
சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சின்னத்திருப்பதியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதன்படி நேற்றைய தினம் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.
இதில் வழக்கத்தை விட ஆடுகள் ஐநூறு முதல் ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனை ஆனது. வெள்ளாடுகள் 6 ஆயிரம் முதல் 17 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆட்டுச்சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story