ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டம் - தமிழக அரசின் அறிவிப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு
ஆண்டுக்கு ஆறு முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தேசிய பஞ்சாயத் ராஜ் தினத்தை முன்னிட்டு இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், காணொலி வாயிலாக கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கிராம சபை கூட்டங்கள் மூலம் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆண்டுக்கு ஆறு முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்தார். மேலும் கவர்னரின் செயல்பாடு குறித்து பேசிய அவர், தமிழகத்தில் ஜனம் தனியாகவும், நாயகம் தனியாகவும் இருப்பதாக குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story