மின்சார ரயில் விபத்துக்கு காரணம் என்ன? - அதிகாரிகள் பரபரப்பு விளக்கம்...


மின்சார ரயில் விபத்துக்கு காரணம் என்ன? - அதிகாரிகள் பரபரப்பு விளக்கம்...
x
தினத்தந்தி 24 April 2022 6:32 PM IST (Updated: 24 April 2022 7:00 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த புறநகர் மின்சார ரெயில் நடைமேடையில் ஏறி விபத்துக்கு உள்ளானது.

சென்னை,

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த புறநகர் மின்சார ரெயில் நடைமேடையில் ஏறி விபத்துக்கு உள்ளானது. பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திற்கு சென்ற மின்சார ரெயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறியதில் ரெயில் பெட்டிகள் சேதம் அடைந்தன.

பணிமனையில் இருந்து சென்ற ரெயில் என்பதால் ரெயிலில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்தில் ரெயிலின் ஓட்டுநர் காயம் அடைந்துள்ளார். 

இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரெயில்வே பாதுகாப்பு அதிகாரி, ரெயில் ஓட்டுநர் பிரேக் பிடிக்காததே ரெயில் விபத்துக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். ஓட்டுநர் பத்திரமாக இருக்கிறார். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. அதனால் ஒரு பெரிய விபத்து ஒன்றும் இல்லை. 

இருந்தாலும், ஓட்டுநரின் கவனக்குறைவினால் பிரேக் பிடிக்காததால், ரெயில் நடைமேடையில் ஏறி சுவரில் மோதி நின்றுள்ளது என்று அவர் கூறினார்.  

Next Story