அரியாங்குப்பம் பகுதியில் 14 பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
அரியாங்குப்பம் பகுதியில் 14 பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடந்தன.
அரியாங்குப்பம்
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடத்த உள்ளாட்சித்துறை அறிவுறுத்தி இருந்தது. அதன்படி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 14 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடந்தன.
அரியாங்குப்பம் பி.சி.டி. நகர் பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் கலந்து கொண்டு பேசினார்.
அரியாங்குப்பம் இந்தியன் வங்கி கிளை மேலாளர் சுந்தரம் விவசாயிகள் கடன் பெறுவதற்கான வழிவகை குறித்து பேசினார். தொடர்ந்து கடன் உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கினார். இதில் கொம்யூன் பஞ்சாயத்து மேலாளர் வீரம்மாள், உதவி பொறியாளர் நாகராஜன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
இதேபோல் அரியாங்குப்பம் மேற்கு மற்றும் கிழக்கு, ராதாகிருஷ்ணன் நகர், மணவெளி, காக்காயந்தோப்பு, வீராம்பட்டினம், ஓடைவெளி, நோணாங்குப்பம், தவளக்குப்பம், பூரணாங்குப்பம், அபிஷேகபாக்கம், டி.என்.பாளையம், நல்லவாடு, ஆண்டியார்பாளையம் உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டங்கள் நடந்தன. இந்த கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உள்ளாட்சித்துறையிடம் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story