10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கியது
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான, செய்முறைத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான, செய்முறைத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் பல கட்டங்களாக தேர்வுகள் நடைபெற உள்ளன. சென்னையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர்.
தேர்வுத் துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. வழக்கமாக 3 மணி நேரம் நடத்தப்படும் செய்முறைத் தேர்வானது, தற்போது மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளதால், நடப்பாண்டு முதல் 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story