திண்டுக்கல்: நகைக்கடையில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி- 2 பேர் கைது..!


திண்டுக்கல்: நகைக்கடையில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி- 2 பேர் கைது..!
x
தினத்தந்தி 25 April 2022 11:15 AM IST (Updated: 25 April 2022 11:56 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே நகைக்கடையில் துளையிட்டு கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வடமதுரை,

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள கெங்கையூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அய்யலூர் ரெயில்நிலையம் செல்லும் சாலையில் நகை கடை மற்றும் அடகு விற்பனை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது நள்ளிரவில் சிலர் கடையின் பின்புறம் இரும்பு கம்பியால் இடித்து தாக்குவது போல சத்தம் கேட்டது.

அப்போது ரோந்து பணியில் இருந்த ஏட்டு வடிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியில் மெதுவாக நோட்டமிட்டு பார்த்தனர். டார்ச்லைட் வெளிச்சத்தில் ஒரு கும்பல் நகை கடை பின்புறம் ஓட்டை போட்டுக் கொண்டு இருந்தது தெரிய வந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இருந்தபோதும் இரவு நேரத்திலும் போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர்.

ஆனால் அதில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர். 2 பேரை பிடித்து விசாரித்ததில் திருச்சி மாவட்டம் எலமனம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் மாணிக்கம் (வயது 25) என தெரிய வந்தது. மற்றொரு வாலிபரை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையர்கள் கொண்டு வந்திருந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தப்பி ஓடிய கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story