துணைவேந்தர்கள் நியமன மசோதாவுக்கு மக்கள் நீதி மையம் வரவேற்பு..!
துணைவேந்தர்கள் நியமன மசோதாவுக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பான சட்ட மசோதா இன்று சட்டசபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதற்கு அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இந்த மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. பொது பல்கலைக்கழகங்கள் சட்ட திருத்த மசோதாவை மகாராஷ்டிரா அரசு கொண்டு வந்த போதே தமிழகம் இதனை முதலில் மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற நம் அறிக்கையை ஏற்று செயல்பட்ட அரசுக்கு நன்றி.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த டுவிட்டர் பதிவுடன் 30.12.2021 அன்று கவர்னரின் அதிகாரத்தை திமுக அரசு மறுவரையறை செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் கேரளா மற்றும் மராட்டியத்தை மேற்கோள்காட்டி வெளியிட்ட அறிக்கையையும் இணைத்து வெளியிட்டுள்ளனர்.
துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவை மநீம வரவேற்கிறது. பொதுப் பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவை மகாராஷ்டிரா கொண்டு வந்தபோதே, தமிழகம் இதனை முதலில் மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற நம் (30.12.2021) அறிக்கையை ஏற்று செயல்பட்ட அரசுக்கு நன்றி. https://t.co/FhOG4IYC4w
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) April 25, 2022
Related Tags :
Next Story