நாகர்கோவில் அருகே துணிக்கடையில் பயங்கர தீ விபத்து...!
நாகர்கோவில் அருகே உள்ள ஒரு துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிகுளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் லிஜின்(வயது 30). இவர் பீச் ரோடு சந்திப்பில் உள்ள 3 தளம் கொண்ட ஒரு வாடகை கட்டிடத்தில் துணிக்கடை நடத்தி வருகிறார்.
இவரது துணிக்கடை முதல் தளத்திலும், 2-ம் தளத்தில் தனியார் வங்கியும் செயல்பட்டு வருகின்றன. நேற்று இரவு வழக்கம் போல் லிஜின், துணிக்கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கடையில் இருந்து புகை மண்டம் கிளம்பியது. இதை பார்த்த பொதுமக்கள், லிஜினுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி பெனட்தம்பி தலைமையில் வீரர்கள் வாகனத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அப்போது கடையின் வெளி பகுதியில் லேசாக தீ பரவியது. உடனே கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது கடையை இருந்த துணி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் கடையில் இருந்த துணிகள் அனைத்தும் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் தீயை மேலும் பரவாமல் தண்ணீரை பீயிச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தின் காரணமாக அந்த பகுதியில் முழுவதும் சிறிது நேரம் புகை மண்டலமாக காட்சி அளித்தது. ஏராளமான பொதுமக்கள், கடைக்காரர்கள் ஏராளமானோர் அந்த பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் கருதுகிறார்கள். இருப்புனும் வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story