கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாற்றம்
நீலகிரி மாவட்ட நீதிபதியாக இருந்த சஞ்சய் பாபா தேதி மாவட்ட முதன்மை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கொடநாடு தேயிலை தோட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. அதில் கடந்த 2017 ஆண்டு ஒரு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த வழக்கை மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா விசாரித்து வந்தார். இந்த நீலையில் நீதிபதிகள் மாற்றம் செய்யும் பட்டியல் நேற்று வெளியானது.
அந்த பட்டியலில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சய் பாபா இடம்பெற்றுள்ளார். அதன்படி நீலகிரி மாவட்ட புதிய நீதிபதியாக சென்னையில் உள்ள தொழில்துறை தீர்ப்பாயத்தின் நீதிபதி முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட நீதிபதியாக இருந்த சஞ்சய் பாபா தேதி மாவட்ட முதன்மை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கொடநாடு வழக்கை முன்பு விசாரித்த நீதிபதி வடமலை பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சய் பாபா தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story