மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு அமைச்சர் அறிவிப்பு
இந்த ஆண்டு மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
சென்னை,
தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை பெருக்கவும், விளைநிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் மற்றும் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் நடப்பு நிதி ஆண்டில் மேலும் 50 ஆயிரம் எண்ணிக்கை புதிய விவசாய மின் இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும்.
திருவாரூர் தியாகராஜர் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் ஆகிய கோவில்களின் தேரோடும் நான்கு மாட வீதிகளில் உள்ள மேல்நிலை மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றப்படும்.
மின்சார வாகனங்களுக்கு ‘சார்ஜிங்’ நிலையம்
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள முக்கிய தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள துணை மின் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான ‘சார்ஜிங்’ நிலையங்கள் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சீரான மின்வினியோகம்
சட்டசபையில் எரிசக்தி துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் தங்கமணி (குமாரபாளையம்) பேசினார்.
அப்போது நடந்த காரசார விவாதம் வருமாறு:-
தங்கமணி (அ.தி.மு.க.):- தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ளது. காரணம் கேட்டால் மத்திய அரசு நிலக்கரி வழங்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழகத்திற்கு 70 சதவீதம் அளவிற்கு கூடுதலாகவே நிலக்கரி கொடுக்கப்பட்டுள்ளது. பிறகு எப்படி மின்வெட்டு வந்தது. நிர்வாக கோளாறுதான் இதற்கு காரணம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி:- 2 நாட்கள் மின் வெட்டு இருந்தது, அதுவும் சரி செய்யப்பட்டு சீரான மின் வினியோகம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. நிர்வாக தவறு என்கிறார், இதற்கு நான் பதிலுரையில் விரிவாக பதில் சொல்கிறேன். எந்த இடத்தில் நிர்வாகத்தின் தவறு என்று சுட்டிக்காட்டினால் அதற்கு நடவடிக்கை எடுக்க அரசு தயாராக இருக்கிறது.
அணில் பிரச்சினை
தங்கமணி:- நான் குறை எதுவும் சொல்லவில்லை. நிர்வாக தவறு என்று நான் குறிப்பிட்டது, கோடைகாலத்தில் அதிக மின் நுகர்வு ஏற்படும் என்று தெரிந்தும் ஏன் 3 மாத தேவைக்கான மின்சாரத்தை முன்கூட்டியே வாங்கவில்லை?. இதைத்தான் நிர்வாக கோளாறு என குறிப்பிட்டேன்.
முன்பு அமைச்சர், அணிலால் மின்வெட்டு ஏற்பட்டது என்று கூறினார். இப்போது நிலக்கரி பற்றாக்குறை என்கிறார். எனவே குறுகிய கால மின்சார கொள்முதல் செய்து இருக்க வேண்டும். எங்கள் ஆட்சியில் மின்வெட்டே இல்லை.
சபாநாயகர்:- அணிலால் விபத்து ஏற்பட்ட சம்பவத்திற்கான ஆதாரத்தை ஏற்கனவே அமைச்சர் என்னிடம் காட்டி விட்டார். அணில் பிரச்சினையை விடுங்க. வேற பிரச்சினையை பேசுங்க. (இவ்வாறு சபாநாயகர் குறிப்பிட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது).
அ.தி.மு.க ஆட்சியில் மின்வெட்டு
அமைச்சர் செந்தில்பாலாஜி:- குறுகிய காலத்தில் மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டும் என்று உறுப்பினர் சுட்டிக்காட்டியிருக்கிறார். கடந்த காலத்தில் மின் வெட்டு இல்லை என கூறுகிறார்கள், ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் 2018-ல் 59 மணி நேரம் 58 நிமிடங்கள் மின்வெட்டு இருந்தது. 2019-ல் 39 மணி நேரம் 20 நிமிடங்கள், 2020-ல் 32 மணி நேரம் 80 நிமிடங்கள், 2021-ல் அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் வரை தொடர் மின் வெட்டு இருந்தது.
தங்கமணி:- நீங்கள் என்ன சொன்னாலும் தி.மு.க. ஆட்சி என்றாலே மின்வெட்டு, அ.தி.மு.க. ஆட்சி என்றாலே தடையில்லா மின்சாரம் என்பதுதான் நிலை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
பின்னர், மானிய கோரிக்கை விவாதத்திற்கு பிறகு, மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்து பேசியதாவது:-
10 ஆண்டுகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியம் நீண்டகால திட்டமிடலை ‘டி.என்.இ.பி. 2.0’ என்று வகுத்திருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் அடுத்த 10 ஆண்டுகளில் உற்பத்தி திறனை 32,591 மெகாவாட்டில் இருந்து 65,184 மெகாவாட்டாக அதிகரிக்கும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் 50 சதவீதம் சொந்த மின் உற்பத்தியாக இருக்கும் அளவில் திட்டமிடப்பட்டுள்ளது.
சீரான மின் வினியோகம்
இந்தியாவில் இருக்கக்கூடிய பல மாநிலங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டை அறிவித்திருக்கின்றன. குறிப்பாக, ஆந்திரா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் எல்லாம் மின்வெட்டை அறிவித்திருக்கின்றன.
ஆனால், தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்ட போதிலும், 2 நாட்களுக்கு முன்பு அந்த பழுது ஏற்பட்டபோது, 2 நாட்களில் அது சரிசெய்யப்பட்டு, சனிக்கிழமையன்று மாலையில் இருந்து சீரான மின் வினியோகம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, இன்று வரை தொடர்ந்து, இனி எப்போதும் தொடர்ந்து, சீரான மின் வினியோகம் செய்யப்படும்.
புதிய மதுக்கடைகள் திறக்கப்படவில்லை
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் எந்த இடத்திலும் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.

Related Tags :
Next Story