முந்திரி பழத்தில் இருந்து ஊட்டச்சத்து பானம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைச்சர் தகவல்
பண்ருட்டியில் அமைக்க ஆய்வு முந்திரி பழத்தில் இருந்து ஊட்டச்சத்து பானம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.
சென்னை,
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன், அவரது தொகுதியில் வைக்கோலை மூலப்பொருளாக வைத்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அரசு முன்வருமா? என்று கேட்டார்.
அப்போது நாகை மாலி, வேல்முருகன், ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் துணைக் கேள்விகள் எழுப்பினார்கள்.
அவர்களுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில் வருமாறு:-
பண்ருட்டி பகுதியில் முந்திரி பழங்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது என்றும், அதன் பருப்பு மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட்டு பழங்கள் வீணாக்கப்படுகிறது என்றும், அந்த பழங்களில் இருந்து ஊட்டச்சத்து பானம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கலாம் என்றும் வேல்முருகன் கூறினார். அதிலிருந்து உற்சாக பானம் தயாரிக்கவில்லை என்றாலும், ஊட்டச்சத்து பானமாவது தயாரிக்க வேண்டும் என்றும் உறுப்பினர் கூறுகிறார்.
இதை வணிக ரீதியாகவும், தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும். கடந்த தி.மு.க. ஆட்சியின்போதே இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்.
மேட்டுப்பாளையம் தொகுதியில் வாழை அதிக அளவில் விளைவதால் அங்கு வாழை தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஏ.கே.செல்வராஜ் கோரிக்கை வைத்தார். வாழையை வைத்து உலகளாவிய சந்தை உருவாக்க வேண்டியது அவசியம். வாழை மரப்பட்டைகள், நார்கள் வைத்து தொழில் தொடங்கும் திட்டம் அரசிடம் உள்ளது.
மேலும், தொழில்முனைவோர்கள் தொழில் தொடங்க முன் வந்தாலும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் முன்வந்தாலும் தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Related Tags :
Next Story