தமிழக பா.ஜ.க.வில் சிறுபான்மையினர்களும் ஒரு அங்கம் - அண்ணாமலை பேச்சு
தமிழக பா.ஜ.க.வில் சிறுபான்மையினர்களும் ஒரு அங்கம் என்று சென்னையில் பா.ஜ.க. சார்பில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மகளிர் அணி தேசியத்தலைவர் வானதி சீனிவாசன், முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்சின் தேசிய துணை தலைவர் பாத்திமா அலி, பா.ஜ.க. சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
சிறுபான்மையினர் ஒரு அங்கம்
இஸ்லாமியர்களின் கடமைகளில் முக்கியமாக கருதப்படும் ரமலான் நோன்பு தற்பொழுது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதுவும் புண்ணிய காலத்தில் நல்ல மனதுடன் நோன்பு இருக்கிறார்கள். இந்த புண்ணிய காலத்தில் உங்களுடன் கலந்து கொள்வதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
பா.ஜ.க.வை பற்றி புரியாதவர்களும், தெரியாதவர்களும் அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க. மாநில தலைவரும், பா.ஜ.க.வினரும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கருதுகிறார்கள். தமிழக பா.ஜ.க.வில் சிறுபான்மையினர் ஒரு அங்கமாக இருந்து வருகின்றனர். பலர் நீண்டகாலமாக பொறுப்புகளிலும் இருந்து வருகின்றனர். இந்தியாவில் அவரவர் கடவுளை விட்டு கொடுப்பதில்லை. இதைத்தான் இந்தியா விரும்புகிறது. ஆனால், பா.ஜ.க.வின் சித்தாந்தத்தை புரிந்து கொள்ளாமல் சிலர் உள்ளனர்.
இஸ்லாமியர்களுக்கும் பங்கு உண்டு
பா.ஜ.க.வில் உள்ள இஸ்லாமியர்களுக்கு தேசியத்தை பற்றியும் முழுமையாக தெரியும். இஸ்லாத்தை பற்றியும் முழுமையாக தெரியும். இந்த கட்சியில் இஸ்லாமியர்களுக்கும் பங்கு உண்டு என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள். பா.ஜ.க.வில் அங்கம் வகிக்கும் இஸ்லாமியர்கள் கட்சியின் வளர்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே துணையாக இருந்து இருக்கிறார்கள். ஆனால், தற்போது சில அரசியல் கட்சிகள் இஸ்லாமியர்களை வாக்கு வங்கிகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்துகளையும், இஸ்லாமியர்களையும் எதிரும் புதிருமாக வைத்து கொண்டு அரசியல் நடத்தி வருகின்றனர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்புக்காகவும், சுதந்திரத்துக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உறுதி செய்து வருகிறார். இஸ்லாம் மதத்தில் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கிறார்கள்.
பா.ஜ.க.வின் சித்தாந்தம்
பா.ஜ.க.வில் அனைவருக்கும் இடம் உண்டு. பா.ஜ.க.வுக்கு ஜனாதிபதியை தேர்வு செய்ய முதல் வாய்ப்பு கிடைத்தபோது இஸ்லாமியரான அப்துல்கலாமை தேர்வு செய்தது. 2-வது முறை வாய்ப்பு கிடைத்த போது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதியை தேர்வு செய்தது.
ஜனாதிபதிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம், பா.ஜ.க.வின் சித்தாந்தத்தை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தநிகழ்ச்சியில், மாநில துணை தலைவர்கள் எம்.என்.ராஜா, வி.பி.துரைசாமி, பொது செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் காயத்திரி தேவி, சிறுபான்மை அணி மாநில தலைவர் ஆசிம்பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story