நடிகை மீரா மிதுன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
முதல்-அமைச்சர் குறித்த அவதூறு கருத்து: நடிகை மீரா மிதுன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
திரைப்பட தயாரிப்பாளர் சுருளிவேல், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், நடிகை மீரா மிதுன் தன்னை பற்றியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றியும் அவதூறான கருத்தை தெரிவித்து கடந்த மார்ச் 16-ந்தேதி சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ளார் என்று கூறியிருந்தார். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மீரா மிதுன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “மீரா மிதுன் இதுபோல அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். அண்மையில்கூட எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைதாகி, ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்” என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story