1 லட்சம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்க இலக்கு - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
ஒரு லட்சம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறியுள்ளார்.
சென்னை,
பட்டதாரி இளைஞர்கள் ஒரு லட்சம் பேருக்கு முகாம்கள் மூலம் வேலை வழங்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 70 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, 'படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தான் எங்களது தலையாய கடமை. இதற்காக தமிழ்நாட்டில் இதுவரை 56 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி 70 ஆயிரம் பேருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்பட்டுள்ளது.
வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் நிச்சயம் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். அரசு ஐடிஐ-யில் 89 சதவீத மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களில் 70 சதவீதம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது' இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story