தூத்துக்குடி: ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்து - 2 பேர் படுகாயம்...!


தூத்துக்குடி: ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்து - 2 பேர் படுகாயம்...!
x
தினத்தந்தி 27 April 2022 2:45 PM IST (Updated: 27 April 2022 2:30 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்தில் மீன் வியாபாரிகள் 2 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

எட்டயபுரம், 

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியை சேர்ந்த அந்தோணி மைக்கேல் என்பவரின் மகன் மரிய அந்தோணி ஜெயபால் (வயது 34). அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் நிக்கோலஸ் மணி (வயது45). 

இவர்கள் இருவரும், தினமும் தருவைகுளத்திலிருந்து ஆம்னி கார் மூலம் மீன் ஏற்றி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மீன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு சாத்தூரிலிருந்து தருவைகுளம் செல்வதற்காக ஆம்னி  வேன் மூலம் இருவரும் வந்துகொண்டிருந்தனர்.  வேன் விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாது.

இதில் நிகோலஸ் மணி மற்றும் மரிய அந்தோணி ஜெயபால் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த விளாத்திகுளம் போலீசார், இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story