சட்டக்கல்லூரிகளில் கூடுதல் முதுநிலை பட்டப்படிப்புகள் - அமைச்சர் ரகுபதி தகவல்
தலைமை செயலக சட்டத்துறையில் 17 சட்ட பட்டதாரிகளுக்கு தன்னார்வ பயிற்சி திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் படித்த 17 சட்ட பட்டதாரிகளுக்கு தலைமை செயலக சட்டத்துறையில் தன்னார்வ பயிற்சி திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதற்காக ஒரு சட்ட பட்டதாரிக்கு மாதம் தோறும் தலா 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார். திருச்சி தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் புதிய சட்ட மையம், வணிகம் மற்றும் மனித உரிமைகள் மையம் ஆகியவை நிறுவப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
மேலும் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, புதுப்பாக்கம், செங்கல்பட்டு மற்றும் திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரிகளில் கூடுதலாக முதுநிலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story