மதுரை: வெள்ளலூரில் சித்திரை மாத முளைப்பாரி திருவிழா...!
வெள்ளலூரில் சித்திரை மாத முளைப்பாரி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளலூரில் சித்திரை மாதத்தில் அம்மன் தெய்வத்தை வழிபடும் முளைப்பாரி விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு முன்னதாக வெள்ளலூர் கிராம மக்கள் கடந்த 2 வாரங்களாக கடுமையான விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று கருங்கல்மந்தையில் ஒன்று கூடிய பக்தர்கள் அங்கிருந்து பாரம்பரிய வழக்கப்படி அம்மன் கரகம் முன்னே செல்ல அதன் பின்னர் அம்மன் முளைபாரிகளுடன் பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஏழைகாத்தம்மன் கோவில் வீட்டில் சிறப்பு பூஜைகளுடன் வழிபட்டு முக்கிய இடங்கள் வழியாக சித்திரை பூ குளத்தில் முளைபாரிகளை பக்தர்கள் கரைத்தனர்.
Related Tags :
Next Story