ம.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி - வைகோ பங்கேற்பு


ம.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி - வைகோ பங்கேற்பு
x
தினத்தந்தி 28 April 2022 12:21 AM IST (Updated: 28 April 2022 12:21 AM IST)
t-max-icont-min-icon

ம.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் அரங்கு ஒன்றில் நடைபெற்றது.

சென்னை,

ம.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் அரங்கு ஒன்றில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புஹாரி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மகளிர் அணி செயலாளர் டாக்டர் ரொஹையா, தமிழக ஜமாதுல் உலாமா அமைப்பின் மாநில துணைத் தலைவர் கே.இலியாஸ் ரியாஜி, ஜமாத்துல் உலமா சபையின் வழிகாட்டு குழு உறுப்பினர் ஜி.எம்.தர்வேஷ் ரஷாதி, குரோம்பேட்டை காயிதே மில்லத் ஜும்மா பள்ளி தலைவர் என்.முகமது காசிம் உள்ளிட்டோர் பேசினர்.

நிகழ்ச்சியில், ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சதர்ன் திருமலைக்குமார், சின்னப்பா, புதூர் பூமிநாதன், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், கழகக்குமார், சுப்பிரமணி மற்றும் தென்றல் நிசார், குரோம்பேட்டை அ.நாசர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story