அமைப்பு தேர்தல் முடிவு: அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியீடு
அமைப்பு தேர்தல் முடிவு: அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியீடு.
சென்னை,
அ.தி.மு.க. சட்ட திட்ட விதிமுறைகளின்படி கடந்த 21, 25-ந்தேதிகளில் கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பட்டு வரும் 75 மாவட்டங்களுக்கு நடந்த மாவட்டச்செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கான தேர்தலில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டச்செயலாளர் பொறுப்புக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச்செயலாளராக ஆதிராஜாராம், தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டச்செயலாளராக பி.சத்தியநாராயணன் என்ற பி.சத்யா, தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டச்செயலாளராக எம்.கே.அசோக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டச்செயலாளராக சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்டச்செயலாளராக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட மாவட்டங்களில் அவைத்தலைவர், இணைச்செயலாளர், துணை செயலாளர்கள், பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட தகவல் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story