தமிழகம் முழுவதும் மே 1-ந் தேதி கிராம சபை: தமிழக அரசு அறிவிப்பு


தமிழகம் முழுவதும் மே 1-ந் தேதி கிராம சபை: தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 29 April 2022 12:32 AM IST (Updated: 29 April 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் மே 1-ந் தேதி கிராம சபை: தமிழக அரசு அறிவிப்பு.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1-ந் தேதியன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.

கிராம சபை கூட்டங்களில் கீழ்க்காணும் பொருள்கள் குறித்து விவாதிக்கப்படும். வரவு-செலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கூட்ட பொருட்கள் உள்ளன.

ஊராட்சிகளின் 2021-22-ம் ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய-மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண், ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

கிராம சபைகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளும்போது உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கோடை வெயிலின் காரணமாக கிராம சபை கூட்டங்கள் காலை 10 மணி அளவில் நடைபெறும் .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story