போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் வாங்கி மோசடி மகன் கைது; தாய்க்கு வலைவீச்சு


போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் வாங்கி மோசடி மகன் கைது; தாய்க்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 April 2022 3:26 AM IST (Updated: 29 April 2022 3:26 AM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் வாங்கி மோசடி மகன் கைது; தாய்க்கு வலைவீச்சு.

சென்னை,

ஆவடி கோவில்பதாகையை சேர்ந்தவர் ஓம் விக்னேஷ்குமார் (வயது 27). இவருடைய தாயார் பெயர் கீதா. இவர்கள் 2 பேரும் போலி ஆவணங்கள் மூலம் எச்.டி.எப்.சி. வங்கியில் நுகர்வோர் கடன் வாங்கி, அதன் மூலம் டி.வி. போன்ற பொருட்களை வாங்கியதாகவும், பணத்தை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துவிட்டதாகவும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதன் அடிப்படையில் ஓம் விக்னேஷ்குமார் கைது செய்யப்பட்டார். அவருடைய தாயார் கீதாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story