போலி சாதிச்சான்றிதழ் மூலம் அரசு பணியில் சேர்ந்தவருக்கு கட்டாய ஓய்வு - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
போலி சாதிச்சான்றிதழ் மூலம் அரசு பணியில் சேர்ந்தவருக்கு கட்டாய ஓய்வு வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
போலி சாதிச்சான்றிதழ் அளித்து கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றி வரும் அறிவியல் உதவியாளர் கணேசன் என்பவருக்கு கட்டாய ஓய்வு வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வு, தீா்ப்பாயம் உத்தரவிட்டு 7 ஆண்டுகள் கழித்து, இந்த மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இத்தனை ஆண்டுகள் சம்பளம் பெற்றது மற்றும் குடியரசுத்தலைவர் விருது பெற்றது ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு கட்டாய ஓய்வு மட்டுமே வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் கணேசனுக்கு, 40 சதவீதம் ஓய்வூதியம் மட்டுமே வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதியை தவிர பிற ஓய்வூதிய பலன்களை அவருக்கு வழங்கக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளளனர்.
தவறு செய்யும் ஊழியா்கள் ஓய்வு பெற்ற பிறகும் துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஏதுவாக மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story