பூண்டி ஏரியில் நீர்திறப்பு - புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சென்னை,
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், குடிநீர் தேவைகளுக்காக பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக புழல் ஏரிக்கு வரும் நீர்வரத்து 200 கன அடியில் இருந்து 440 கன அடியாக அதிகரித்துள்ளது.
21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் இன்றைய நிலவரப்படி 19.41 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. அதே சமயம் சென்னையின் குடிநீர் தேவைகளுக்காக புழல் ஏரியில் இருந்து 156 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story