பப்ஜி மதன் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பப்ஜி மதன் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
ஆபாசமாக பேசிக்கொண்டு பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தவறான வழியில் கொண்டு சென்றதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பப்ஜி மதனை கடந்த ஆண்டு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் கடந்த ஆண்டு ஜூலை 5-ந் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.
அதையடுத்து, ஜாமீன் கேட்டு பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் பப்ஜி மதன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜாமீன் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

Related Tags :
Next Story