சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று


சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 30 April 2022 4:16 AM IST (Updated: 30 April 2022 4:16 AM IST)
t-max-icont-min-icon

மொத்த எண்ணிக்கை 183 ஆனது: சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று 12 பேர் குணமடைந்தனர்.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 453 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வந்தன. இதில் 11 பேருக்கு தொற்று உறுதியானது.

புதிதாக தொற்று பாதிப்புக்கு ஆளான 11 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இருக்கும் 7 ஆயிரத்து 490 பேரில் இதுவரை 7 ஆயிரத்து 104 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இதுவரை சென்னை ஐ.ஐ.டியில் கொரோனா பாதித்தவர்களில் நேற்றைய நிலவரப்படி 12 பேர் குணமடைந்துள்ளனர்.

Next Story