ஜெயலலிதா குறித்து அவதூறு பேச்சு: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு ரத்து
ஜெயலலிதா குறித்து அவதூறு பேச்சு: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
திருவாரூரில் கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் தற்போது அமைச்சராக உள்ள பொன்முடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாடு முதல்-அமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா குறித்து அவதூறாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசினார் என்று அ.தி.மு.க. நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருவாரூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொன்முடி கடந்த 2015-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story