சீர்காழி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் படுகாயம்...!


சீர்காழி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் படுகாயம்...!
x
தினத்தந்தி 30 April 2022 10:45 AM IST (Updated: 30 April 2022 10:35 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்தில் பயணிகள் 15 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

சீர்காழி, 

காரைக்காலில் இருந்து புதுச்சேரி நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சீர்காழி அருகே சூரக்காடு என்ற பகுதியில் பஸ்சின் எதிரே வந்த லாரிக்கு வழிவிடுவதற்காக திருப்பிய போது நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பஸ் இருந்தவர்களை மீட்டு சீர்காழி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்போர் காயங்களுடன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். 

இதில் அரசு பஸ் டிரைவர் அன்பழகன் மற்றும் பயணிகள் வீரப்பன், ரவிச்சந்திரன், குப்புசாமி, நந்தகுமார், மாரியப்பன், வடிவழகன் ,பிருந்தா, சக்திபால், ராம்குமார், பூஜா, லாவண்யா, ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பினர். 
சிதம்பரம் பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த கலைப்பொன்னி ஆகியோர் தலையில் பலத்த அடிபட்டு சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் ரா.லலிதா, சீர்காழி கோட்டாட்சியர் நாராயணன், தாசில்தார் செந்தில்குமார் உடனடியாக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டு விபத்து நடந்தது பற்றி பயணிகளிடம் கேட்டறிந்து. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் சிகிச்சைகளை மேற்கொள்ளவும் மருத்துவர்களிடம் கூறினர். 

மேலும் இந்த விபத்து குறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story