“இரட்டை பதவி உயர்வு கோர உரிமை இல்லை” - சென்னை ஐகோர்ட் உத்தரவு


“இரட்டை பதவி உயர்வு கோர உரிமை இல்லை” - சென்னை ஐகோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 1 May 2022 4:54 AM IST (Updated: 1 May 2022 4:54 AM IST)
t-max-icont-min-icon

பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரி உதவி பேராசிரியர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

சென்னை,

இணை பேராசிரியர் பதவி உயர்வு வழங்கிய சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம், பேராசிரியராக பதவி உயர்வு வழங்கவில்லை என்றும், பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரியும் உதவி பேராசிரியர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் தரப்பு கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்கும்படி உத்தர்விட்டிருந்தது. இதன்படி கோரிக்கையை பரிசீலித்த அண்ணாமலை பல்கலைக்கழகம், பேராசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரித்து 2021 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து உதவி பேராசிரியர்கள் சார்பில் மீண்டும் தொடர்பட்ட வழக்கு, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரட்டை பதவி உயர்வு கோர அனுமதி இல்லை எனக் கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story