கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல முயன்ற மனைவி உட்பட 3 பேர் கைது...!


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல முயன்ற மனைவி உட்பட 3 பேர் கைது...!
x
தினத்தந்தி 1 May 2022 6:23 AM GMT (Updated: 2022-05-01T11:53:36+05:30)

சென்னை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல முயன்ற மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர் மணிமாறன் (வயது 42 ). இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அபிபுனிசா என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.

இந்த நிலையில் யுவராஜ் (36) என்பவருடன் அபிபுனிசாவுக்கு தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து மனைவி அபிபுனிசா யுவராஜிடம் தெரிவித்து உள்ளார்.

அப்போது போதையில் இருந்த யுவராஜ் தனது நண்பர் ராம் குமாருடன் சேர்ந்து கடற்கரையில் படகை பழுது நீக்கி கொண்டிருந்த மணிமாறணை சுத்தியலால் தலையில் அடித்துள்ளார்.  இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய மணிமாறனின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே யுவராஜ் தப்பி ஓடிவிட்டார்.  இது குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.  

இந்த நிலையில் பூங்காவனபுரத்தைச் சேர்ந்த யுவராஜ் (36 )ஒண்டிகுப்பத்தை சேர்ந்த ராம் குமார் ( 32) மணிமாறனின் மனைவி அபிமுனிசா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story